இந்தியாவிடம் இருந்து இலங்கையர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை!

tamilni 347

இந்தியாவிடம் இருந்து இலங்கையர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை!

எமது நாட்டு இளைஞர்கள் இந்தியாவிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது அயல் நாடான இந்தியா சந்திரனுக்கு சென்ற நான்காவது நாடாக வரலாற்று ரீதியில் சாதனை படைத்துள்ளது. ஆகவே நாங்கள் இந்தியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கீழ்த்தரமான கலாச்சாரம் இந்திய இளைஞர்களிடம் இல்லை
அதேபோன்று இந்தியாவின் அதிஷ்டமாக இவ்வளவு செலவு செய்து சந்திரனுக்கு போகும் போது மலசலகூடமின்றி எத்தனை பேர் இருக்கின்றனர், வறுமையில் எத்தனை பேர் இருக்கின்றனர் , படிக்காதவர்கள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்றெல்லாம் கூறி அந்த மகிழ்ச்சியை தடுக்கும் கீழ்த்தரமான கலாச்சாரம் இந்திய இளைஞர்களிடம் இல்லை.

இந்தியர்கள் இனம், குலம் வேறுப்பட்டிருக்தாலும் இந்திய கொடியுடன் இந்திய தேசம் என்ற புதுமையான உணர்வுடன் இருக்கின்றனர்.

அதனை விடுத்து அங்குள்ள குறைகளை கூறிக்கொண்டு அதனை தடுக்கும் எண்ணத்தில் அங்குள்ளவர்கள் இல்லை. அதுவே அவர்களின் வெற்றிக்கு பிரதான காரணமாக உள்ளது. எமது நாட்டு இளைஞர்கள் இந்தியாவிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

 

Exit mobile version