வரவு செலவுதிட்டத்தில் மக்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதி

19 10

வரவு செலவுதிட்டத்தில் மக்களுக்கு கிடைக்கப்போகும் வெகுமதி

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வற் (VAT)வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியும் கிடைத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு அதிக சதவீதமும், மற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு குறைந்த சதவீதமும் வற் வரி குறைக்கப்படும்.

3 வற் விகிதங்கள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பிக்க உள்ளார்.

வற்வரியை குறைப்பதன் மூலம் அரசாங்கம் இழந்த வருமானத்தை ஈடுசெய்யும் வகையில் பல மாற்று வருமான முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version