இன்று மின்சாரம் துண்டிக்கப்படுமா? இலங்கை மின்சார சபை

CEB

இன்று மின்சாரம் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் எண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

நேற்று கனியவள கூட்டுதாபனத்திடம் பெறப்பட்ட 3 ஆயிரம் மெற்றிக் டன் டீசல் தற்பேழுது போதுமானதாக உள்ளதாகவும், மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படமாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கன்சமான அளவு மின்சார தேவை இல்லாதவிடத்து எதிர்வரும் செவ்வாய் வரை குறித்த எரிபொருள் போதுமானதான இருக்கும், எதிர்வரும் செவ்வாய் கிழமை தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#srilankanews

Exit mobile version