rtjy 53 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உயிரிழக்கும் காட்டு யானைகள்

Share

இலங்கையில் உயிரிழக்கும் காட்டு யானைகள்

2023 அக்டோபர் மாதம் வரை இலங்கையில் மொத்தம் 399 யானைகள் இறந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை யானை-மனித மோதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இயற்கை காரணங்களினாலும் கணிசமான எண்ணிக்கையிலான காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக திணைக்களத்தின் விளம்பர அதிகாரி ஹாசினி சரத்சந்திர தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 74 யானைகளும், மின்சாரம் தாக்கி 47 யானைகளும், ஹக்கபட்டாசு பாவனையால் 39 யானைகளும், விசவாயு தாக்கி 3 யானைகளும், தொடருந்து விபத்தில் 19 யானைகளும், வீதி விபத்தில் ஒரு யானையும், விவசாய கிணற்றில் விழுந்து நான்கு யானைகளும் உயிரிழந்துள்ளன.

இதுமட்டுமன்றி மேலும் பல்வேறு சம்பவங்கள் காரணமாக 15 யானைகள் இறந்துள்ளன. மீதமுள்ள இறப்புகள் முதுமை மற்றும் இயற்கை பேரழிவுகள் போன்ற இயற்கை காரணங்களால் நிகழ்ந்துள்ளது.

2022 ஆம் ஆண்டிலேயே யானைகளின் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ள ஆண்டாகும், அந்த ஆண்டில் 439 இறப்புக்கள் பதிவாகியுள்ளன.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, 2022 உடன் ஒப்பிடும் போது, இலங்கை வரலாற்றில் இந்த ஆண்டில் யானை மரணங்கள் அதிகளவில் பதிவாகும் வாய்ப்புக்கள் அதிகம் என ஹாசினி சரத்சந்திர கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...