rtjy 330 scaled
இலங்கைசெய்திகள்

சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு அதிகாரம்

Share

சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு அதிகாரம்

முன்மொழியப்பட்டுள்ள சுயாதீன நாடாளுமன்ற தர நிர்ணய அதிகார சபைக்கு (IPSA) கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றும் அதிகாரம் இருக்கும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு புதிய நாடாளுமன்ற தரநிலைகள் யோசனையின் கீழ் அமைக்கப்படும், இந்த நிலையில், சட்டமூலத்தின் பூர்வாங்க வரைவு தொடர்பில் சபாநாயகர் மற்றும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் முன்வைத்த கூட்டுப் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் சட்டமூலத்தின் ஆரம்ப வரைவு தயாரிக்கப்பட்டதுடன் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை மீறும் உறுப்பினர்களுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படுவதை உத்தேச சட்டம் உறுதி செய்யும் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள யோசனையின் முக்கிய நோக்கங்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் நம்பகத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் தொழில்முறை ஆகியவற்றை உறுதி செய்வதாகவும், அதன் மூலம் நாடாளுமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதாகவும் இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...