போதைப்பொருள் மற்றும் மதுபான விற்பனை மூலம் திரட்டப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோதப் பணத்தை முதலீடு செய்த குற்றச்சாட்டில், ஒரு பெண்ணுக்குச் சொந்தமான பெருமளவு சொத்துக்களை முடக்குவதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு (Illegal Assets Investigation Unit) தீர்மானித்துள்ளது.
முன்னதாக, பணமோசடி குற்றச்சாட்டில் அந்தப் பெண்ணின் கணவருக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டன.
விசாரணைகளின் போது, அவரது மனைவி சட்டவிரோத முறையில் திரட்டப்பட்ட பணத்தைச் சொத்துக்களில் முதலீடு செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 45 வயதுடைய சந்தேகநபரான அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக ஈட்டிய பணத்தைப் பயன்படுத்தி எஹெலியகொட- இரத்தினபுரி வீதிக்கு அருகாமையில் பின்வரும் சொத்துக்களை அவர் வாங்கியுள்ளார்:
3 கோடி ரூபாய் மதிப்புள்ள மூன்று காணிகள்.ஆறு பேர்ச் காணியில் கட்டப்பட்ட கடையுடன் கூடிய இரண்டு மாடி கட்டடம்
இந்தச் சொத்துக்கள் அனைத்தும், பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் (Money Laundering Prevention Act) கீழ் 7 நாட்கள் வரை விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்தவோ முடியாதபடி செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளன.