24 9
இலங்கைசெய்திகள்

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அஞ்சுவது ஏன்..! கேள்வி எழுப்பிய கஜேந்திரகுமார்

Share

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால், சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கனடாவின் பிரம்டன் நிகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம், கடந்த 10 ஆம் திகதி அந்நகர மேயர் பற்ரிக் பிரவுனால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

அதுமாத்திரமன்றி கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 104 ஆம் இலக்க தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டத்தின் பிரகாரம் இம்மாதம் 12 – 18 ஆம் திகதி வரையான ஒரு வார காலம் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எவ்வித ஆதாரமும் அற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டு மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்ட ஒப்புதல் என்பன தொடர்பில் கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தினார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசின் முயற்சிகளைப் பெரிதும் பலவீனப்படுத்தி சிக்கலாக்குவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.

இது குறித்து ஊடகங்களிடம் நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால், சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும், இலங்கை அரசு எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திட்டு, அதனூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏன் இடமளிக்கவில்லை என்றும் அவர் வினவியுள்ளார்.

உண்மைக்கு அரசு அஞ்சுகின்றது என்பதே யதார்த்தமாகும். உண்மையின் ஊடாக மாத்திரமே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

இருப்பினும் முன்னைய அரசுகளைப் போன்று உங்களது அரசும் அதனைத் தொடர்ந்து நிராகரித்து வருகின்றது என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. விசனம் வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
24 11
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு : ஹரிணி தலைமையில் அதிருப்தி அணி

தேசிய மக்கள் சக்தி(NPP) அரசாங்கத்தினுள் சப்தமின்றி பாரிய விரிசல் ஒன்று தீவிரமடைந்து வருவதாக அரசியல் ஆய்வாளர்களால்...

18 16
இலங்கைசெய்திகள்

வடக்கு முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் சுமந்திரன்! சங்கு கூட்டணியிடம் அவரே தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும்...

23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்...

22 11
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திருமணத்திற்கு தயாராகும் இளைய தலைமுறையினருக்கு முக்கிய அறிவிப்பு

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக்...