இலங்கைசெய்திகள்

வெள்ளை ஈ நோய்த் தாக்கம் : தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு

Share
tamilni 285 scaled
Share

வெள்ளை ஈ நோய்த் தாக்கம் : தென்னைப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு அரசாங்கம் அறிவிப்பு

தென்னை பயிர்ச்செய்கையில் பூச்சிகளால் சேதம் ஏற்பட்டால், தேசிய அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு பிரிவிற்கு தொடர்புகொள்ளுமாறு அறிவித்தல் வெளியி்ப்பட்டுள்ளது.

வறட்சியான காலநிலையுடன் தென்னைச் செய்கையில் வெள்ளை ஈ சேதம் காணப்படுவதாக தென்னைப் பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் தங்கொடுவ, நாத்தாண்டிய, சிலாபம், முகுனுவடவன, ஆரியகம, பட்டுலுஓயா மற்றும் முந்தலம ஆகிய பிரதேசங்களில் வெள்ளை ஈக்களின் சேதம் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

தென்னை பயிர்ச்செய்கைச் சபையானது, நாட்டின் ஏனைய பகுதிகளில் வெள்ளை ஈ நோய் உள்ளதா என்பதை ஆராயுமாறு பயிர்ச் செய்கையாளர்களிடம் கோரியுள்ளது.

அதேவேளை, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு தென்னைப் பயிர்ச்செய்கை சபைக்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.

தென்னை ஆராய்ச்சி நிறுவனம் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் சோப்புத் தூள் கலவையை தெளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்னைப் பயிர்ச்செய்கையில் வெள்ளை ஈ அல்லது ஏதேனும் நோய் மற்றும் பூச்சிகளால் சேதம் ஏற்பட்டால், லுணுவில தென்னை அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள தென்னை பயிர்ச்செய்கைக்கான தேசிய அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு பிரிவின் 032-3135255 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு 1228 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும்.

தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கன்னொருவ தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தின் 1920 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் வெள்ளை ஈ சேதம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...