5 15
இலங்கைசெய்திகள்

வழமைக்கு திரும்பிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்

Share

வழமைக்கு திரும்பிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக்

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த முகப்புத்தகம், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எனினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் வழமைக்கு திரும்பியதா என்பது தொடர்பில் இதுவரையில் அந்நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று (11) நள்ளிரவு முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ்அப், முகப்புத்தகம் உள்ளிட்ட மெட்டா சேவைகள் முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

நேற்றிரவு 11 மணி முதல் வட்ஸ்அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என்று எக்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் முறைப்பாடுகளை அளித்து வந்தனர்.

இந்நிலையில், மெட்டா நிறுவனம் இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக சில பயனர்களின் பயன்பாடுகளை அணுகும் திறனைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக விடயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் உழைத்து வருகிறோம், சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளது.

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் முகப்புத்தகம் ஆகியவை சற்றுமுன்னர் உலகளாவிய செயலிழப்பை சந்தித்துள்ளது.

இது மில்லியன் கணக்கான பயனர்களை அவதிக்குள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இன்று நள்ளிரவில் உலகெங்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களும் முடங்கின.

பயனர்கள் குருஞ்செய்திகள் மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று இரவு 11 மணி முதல் வாட்ஸ்-அப் செயலியின் மூலம் குறுந்தகவல்கள் எதுவும் பகிர இயலவில்லை என எக்ஸ் தளத்தில் பயனாளர்கள் புகாரளித்து வந்தனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...