வெல்லவாய பகுதியில் பேருந்து விபத்து: பலர் வைத்தியசாலையில்

24 65fba6f0460ac

வெல்லவாய பகுதியில் பேருந்து விபத்து: பலர் வைத்தியசாலையில்

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதி பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வெல்லவாய குமாரதாச சந்தியில் சற்று முன்னர் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக தெரியவருகிறது.

விபத்து காரணமாக 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் பேருந்து சாரதி உட்பட 15 பேர் வெல்லவாய ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version