16 13
இலங்கைசெய்திகள்

மலையக மக்களுக்காக நாடாளுமன்றில் குரல் கொடுத்த சிறீதரன் எம்.பி

Share

உலக வரைபடத்தில் லயன்களில் வாழ்பவர்களாக மலையக மக்களே இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Sridharan) தெரிவித்துள்ளார்.

மலையக மக்களின் வாழ்க்கையை இந்த அரசாங்கம் அபிவிருத்தி செய்தால் அரசு வரலாற்றில் இடம்பிடிக்கும் என சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (09) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “மலையக மக்களின் அடிப்படை சம்பள பிரச்சினை தொடர்பில் மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி எடுக்கும் தீர்மானங்களுக்கு நாம் ஆதரவளிப்போம்.

மலையக மக்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவர்களோகவே உள்ளனர். உலக வரைபடத்தில் லயன்களில் வாழ்பவர்களாக மலையக மக்களே இருக்கிறார்கள்.

எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி மலையக மக்கள் வாழ்கின்றனர். அவர்களுடைய வாழ்வில் மாற்றம் மிகவும் முக்கியமானது.

நலன்புரி நடவடிக்கைள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

நலன்புரி தேவைப்படுவோருக்கு இன்றி வசதி படைத்தோருக்கு நலன்புரி சென்றடைந்ததை காணமுடிகின்றது. தேவையுடையோர் பயனடைய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இந்த அரசாங்கத்திலாவது மலையக மக்களுக்கு சொந்த நிலம் மற்றும் வீடு அமைத்துக்கொடுக்கப்பட்டால் வரலாற்றில் சாதனை புரிந்த அரசாக மாறக்கூடும்” என்று தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...