திருமணத்திற்கு தயாரான இளைஞனுக்கு நேர்ந்த கதி

tamilni 324

திருமணத்திற்கு தயாரான இளைஞனுக்கு நேர்ந்த கதி

காலி மாத்தறை பிரதான வீதியில் கொக்கல சிங்கதீவர கிராமத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மிதிகம அஹங்கம பகுதியைச் சேர்ந்த நிரோஷ் அசேல ரங்ககுமார என்ற 29 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

நண்பர் ஒருவரின் திருமணத்தை பதிவு செய்வதற்கான சாட்சி கையொப்பமிட்டுவிட்டு, குறித்த நண்பரும் மேலும் இரு நண்பர்களும் முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டி தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

சாட்சியத்தில் கையெழுத்திட்ட நண்பர் உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய மூவரும் படுகாயமடைந்து காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

திருமணத்திற்கு தயாரான இளைஞன் உயிருக்கு போராடி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version