images 6
இலங்கைசெய்திகள்

இன்று டிசம்பர் 4 வானிலை முன்னறிவிப்பு: மேல் மற்றும் சப்ரகமுவாவில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

Share

இன்று டிசம்பர் 04ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் மழையும் சில பகுதிகளில் பலத்த மழையும் எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Share
தொடர்புடையது
20 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2027ஆம் ஆண்டில் முன்பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு

2027ஆம் ஆண்டிலிருந்து முன்பள்ளிகளுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள்...

19 12
செய்திகள்அரசியல்இலங்கை

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியில் விபத்து: அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் சகோதரர் உயிரிழப்பு!

பாதெனிய – அனுராதபுரம் பிரதான வீதியின் மஹகல்கடவல பகுதியில் இன்று (மார்ச் 15) இடம்பெற்ற சாலை...

18 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் ஊடகப் பொறுப்புணர்வு: பிரதமர் ஹரிணி அமரசூரியவின் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் வளர்ச்சி, தகவல்களை ஜனநாயகப்படுத்தியுள்ள அதேவேளையில், அவற்றின் உண்மைத்தன்மை மற்றும்...

17 14
செய்திகள்அரசியல்இலங்கை

அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவுக்கு எதிராக மஹர நீதவான்...