காலநிலை தொடர்பான அறிவிப்பு

tamilni 449

காலநிலை தொடர்பான அறிவிப்பு

இன்றைய காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் கொந்தளிப்பான தன்மை காணப்படுகின்றது.

இதன் காரணமாக நாட்டில் மழையின் நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும்.

வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணத்தில் சில இடங்களில் சமார் 100 மில்லி மீற்றர் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களிடம் கோரியுள்ளது.

Exit mobile version