tamilni 302 scaled
இலங்கைசெய்திகள்

சூறாவளி குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

சூறாவளி குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளியாக மாற்றமடைந்து, கிழக்கு ஈசான மூலைப் பகுதியில் பயணிக்கலாமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த தாழமுக்கம் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறி, பங்களாதேஷ் கடற்பகுதியை நோக்கி பயணிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இதனால் இடியுடன் கூடிய மழை மற்றும் பாரிய அலைகள் உருவாகக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடும் காற்று மற்றும் கடல் பிரதேசங்களில் பெரும் அலைகள் காணப்படுவதால் அவதானமாக செயற்படுமாறு கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய – மேற்கு வங்காள விரிகுடா கடற்பிரதேசத்தில் பயணிக்கும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அவதானத்துடன் செயற்படவேண்டுமென்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த வகையில் வடக்கு, மேற்கு கடற்பகுதிகளில் 40-45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம் என்றும் அந்தக் கடற்பகுதியில் கடும் காற்று, இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 01 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 46
செய்திகள்உலகம்

நிலவின் மறுபக்கத்திலிருந்து ஆர்டெமிஸ் II விண்கலம் அனுப்பிய கண்கவர் புகைப்படம்!

நிலவைச் சுற்றி வரும் தங்களது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, நாசாவின் ஆர்டெமிஸ்...

world 45
செய்திகள்உலகம்

போர்நிறுத்த உடன்படிக்கைக்கு மத்தியிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான...

world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...