“ஜனாதிபதித் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தேர்தலை ஒத்திப்போட நினைத்தால் மக்களுடன் வீதிக்கு இறங்கி ஜனாதிபதி ரணிலை விரட்டியடிப்போம்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடுப் பகுதியில் இப்போதுள்ள ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிகின்றது.
அரசமைப்பின்படி, அதற்கு முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடத்தி ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும்.
அந்தத் தேர்தலை ஒத்திப்போடுவதற்கோ அல்லது வேறு ஏதும் சதி செய்வதற்கோ இடம்கொடுக்கமாட்டோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.