1 50
இலங்கைசெய்திகள்

யோஷிதவின் கைது தொடர்பில் நேற்று முன்தினம் நடந்த பேச்சு! கசிந்த அநுர தரப்பின் உள்ளகத் தகவல்கள்

Share

யோஷிதவின் கைது தொடர்பில் நேற்று முன்தினம் நடந்த பேச்சு! கசிந்த அநுர தரப்பின் உள்ளகத் தகவல்கள்

இலகுவில் ஆட்சியை கைவிடப் போவதில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர(Aruna Jayasekara) தெரிவித்துள்ளார்.

மிகவும் சிரமப்பட்டு இந்த ஆட்சியைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெலியத்த பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யோஷிதவை(Yositha Rajapaksa) கைது செய்வது தொடர்பில் நேற்று முன்தினம் பேசப்பட்டதாகவும் இந்த விடயத்தை தாம் வெளியே சொல்லவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யோஷிதவை கைது செய்வது போதுமானதல்ல என தற்பொழுது விமர்சனங்கள் வெளியிடப்படும் மற்றுமொருவரை கைது செய்யுமாறு கோரப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் எவரைக் கைது செய்வது என்றாலும் சரியான சட்ட விதிகள் பின்பற்றி கைது செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா போன்று நடந்து கொள்ள முடியாது சரியான முறையில் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆறு மாத காலத்தில் எம்மால் இவர்களை கைது செய்ய முடியாவிட்டாலும் இதனை கைவிடப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆட்சியை கைப்பற்றுவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை விடவும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல மடங்கு முயற்சிக்க வேண்டியிருக்கும் என அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...