vijitha herath
இலங்கைஅரசியல்செய்திகள்

அடுத்த ஆட்சி அமைப்பது நாமே – மார்தட்டும் ஜே.வி.பி!!

Share

அடுத்து இலங்கையில் ஆட்சி அமைப்பது ஜே.வி.பி யாக மட்டுமே இருக்க முடியுமென மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

ஜே.வி.பியின் வாக்குவங்கி என்பது வெறும் 3 வீதம் அல்ல. அந்த எண்ணிக்கை தற்போது 75 வீதமாக அதிகரித்துள்ளது.

பிரதான கட்சிகளின் ஆதரவாளர்களும், மக்களும் எம்முடனேயே இருக்கின்றனர். அதனால்தான் ஜே.வி.பியின் எழுச்சியை தடுப்பதற்கு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஓர் அங்கமாகவே முட்டைத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான தாக்குதல்கள் மூலம் எமது பயணத்தை தடுக்க முடியாது. முடிந்தால் அரசியல் கொள்கை அடிப்படையில் மோதுமாறு சவால் விடுக்கின்றேன்.

அதேவேளை, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவின் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் குண்டர் குழுவை பயன்படுத்திய அரசியல் தரப்பு அதற்கு பொறுப்புக்கூறவேண்டும்.

இன்று முட்டை தாக்குதல் நடத்தியவர்கள், நாளை எதையும் செய்யலாம். எனவே, அநுரவை காக்குமாறு நாட்டு மக்களும் கோரிவருகின்றனர்.” – என்றார் .
#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...