வாகனங்கள் வேண்டாம் என நான் கூறவில்லை! பிமல் ரட்நாயக்க,

24 6742bf78981db

வாகனங்கள் வேண்டாம் என நான் கூறவில்லை! பிமல் ரட்நாயக்க,

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வேண்டாம் என்று தாம் கூறவில்லை என அமைச்சர் பிமல் ரட்நாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் வழங்கப்படும் உணவு மற்றும் வாகனங்கள் வேண்டாம் என கூறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உணவின் விலையை சந்தை நிலைமைகளின் அடிப்படையில் அதிகரிக்குமாறு தமது கட்சியே கோரியதாகத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீட்டிலிருந்து உணவு சமைத்துக் கொண்டு வந்து பணிகளை ஆற்ற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டை சாப்பிட்டவர்கள் தற்பொழுது நாடாளுமன்ற உணவு குறித்து விமர்சனம் வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரணில் விக்ரமசிங்க எப்படியாவது நாடாளுமன்றிற்குள் நுழைந்து கொள்ள முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version