விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி வடக்கு, கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதில் ஓர் அங்கமாக வலி. கிழக்கு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புத்தூர் மற்றும் உரும்பிராய் கமநல சேவை நிலையங்கள் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இன்று முற்பகல் 9.15 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்றிருந்தார்.
வெங்காய இறக்குமதியை முற்றாகத் தடை செய், விவசாயிகளுக்கான உரம், கிருமிநாசிகளை போதியளவு கிடைக்க வழி செய் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும் உருளைக்கிழங்கு அறுவடை காலத்தில் உருளைக்கிழங்கு இறக்குமதியை தடை செய் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை மூளாயில் உள்ள கமநல சேவை நிலையத்திற்கு முன்னாலும் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் உரத்தை தடுத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதே, விவசாயிகளே நாட்டின் முள்ளந்தண்டு என்று கூறிவிட்டு விவசாயிகளின் முள்ளந்தண்டினை முறிக்காதே, உர என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#SrilankaNews
Leave a comment