3 24
இலங்கைசெய்திகள்

படைவீரர்களுக்கு நன்றி செலுத்த முடியாதவர் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்றவர்

Share

அரசாங்கம் படைவீரர்களை மறந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

படைவீரர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் இன்று சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் படைவீரர்களிடம் இருந்து இரவல் வாங்கப்பட்டது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெறவுள்ள படைவீரர் நினைவு நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்க திட்டமிட்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சமூக ஊடகங்களில் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக ஜனாதிபதி இன்று நிகழ்வில் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

நீர் வெறுப்பு நோயினால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்றை இழுத்து வருவது போன்றே ஜனாதிபதி மக்களினால் நிகழ்விற்கு அழைத்து வரப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

படையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்திய ஓர் போராட்டக்குழுவின் தலைவரே இன்று நாட்டின் ஜனாதிபதியாக கடமையாற்றி வருகின்றார் என உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே ஜனாதிபதி அநுரவிற்கு படைவீரர்கனை நினைவுகூர்வது சிரமமானதாக இருக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிப் போர் இடம்பெற்ற காலத்தில் அப்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்தவரே இந்த ஜனாதிபதி என அவர் குற்றம் சுமத்தியுள்ளர்.

அப்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு அநுர தரப்பினர் சூழ்ச்சி செய்தனர் எனவும் வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுத்தனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படைவீரர்களுக்கு நன்றி செலுத்த முடியாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கத் தகுதியற்றவர் என உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...

12879419
செய்திகள்அரசியல்இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர் நாளாந்தக் கொடுப்பனவு ரூ. 1,550 ஆக உயர்வு: சுகாதார மேம்பாட்டிற்கு ரூ. 31,000 மில்லியன் ஒதுக்கீடு – ஜனாதிபதி அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்தக் கொடுப்பனவை அதிகரிப்பது மற்றும் சுகாதாரத் துறையில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து...

STK022 ELON MUSK CVIRGINIA F
செய்திகள்உலகம்

உலகின் முதல் ட்ரில்லியன் டாலர் பணக்காரராகும் வாய்ப்பு: எலான் மஸ்க்கின் ரூ. 1 ட்ரில்லியன் ஊதியக் கோரிக்கைக்கு டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்புதல்!

உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், தனக்கு 1 ட்ரில்லியன் டாலர்...

digital ID
செய்திகள்இலங்கை

டிஜிட்டல் பொருளாதாரம்: 2026-ல் ரூ. 25,500 மில்லியன் முதலீடு; மார்ச் 2026-ல் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்!

நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக...