இலங்கைசெய்திகள்

அரசியலுக்காகத் தமிழர்களை நாம் ஏமாற்றவில்லை – தேசிய மக்கள் சக்தி

4 5
Share

அரசியலுக்காகத் தமிழர்களை நாம் ஏமாற்றவில்லை – தேசிய மக்கள் சக்தி

அரசியலுக்காகத் தமிழ் மக்களை ஏமாற்ற வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) இல்லை என அக்கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மூலம் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி தயாரில்லை.

எனவே, இந்த நாட்டை மாற்றுவதற்காக அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு புதியதொரு திசையை நோக்கி நகர வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டம் ஊடாகப் பிரச்சினைகள் தீரவில்லை. அது தோல்வி கண்டதொரு பொறிமுறையாகும்.

நானும் மாகாண சபையில் அங்கம் வகித்துள்ளேன். தீர்வுக்குப் பதிலாக அதன்மூலம் நிர்வாகப் பொறிமுறையில் பிரச்சினைகள் வந்துள்ளன.

13ஆவது திருத்தச் சட்டம் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் நிறைவேறாத போதிலும், அது வெள்ளை யானையாகக் கருதப்பட்டாலும் தற்போது வடக்கு, கிழக்கு மக்கள் 13 என்பது தாம் வென்றெடுத்த உரிமையாகவே கருதுகின்றனர்.

எனவே, இதற்கு மாற்றுத் தீர்வை வழங்காமல் ஒரேடியாக 13ஐ நீக்கினால் அது வேறு பிரச்சினைக்கு வழிவகுக்கும்.

13 ஆவது திருத்தச் சட்டம் தற்போதுள்ளவாறு அமுலாக்கப்படும். பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கண்ட பின்னர், அதனைக் குறுகிய காலப்பகுதிக்குள் செய்ய முடியும்.

புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும். அதன்மூலம் அனைத்து இன மக்களினதும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும். அனைவரும் சம உரிமை பெற்ற சுமூகமாக வாழ முடியும்” எனக் கூறியுள்ளார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....