வடக்கில் சூடு பிடித்துள்ள தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை

24 663092133a3e7

வடக்கில் சூடு பிடித்துள்ள தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை

நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிகரித்து வரும் கடும் வெப்பம் காரணமாக மன்னாரில் (Mannar) தர்பூசணி மற்றும் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது.

மன்னாரின் பல இடங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் தர்பூசணி விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னார் (Mannar) மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கு தர்பூசணி மற்றும் நுங்கு கொள்வனவுகளில் பொதுமக்கள் அதிகம் ஈடுபடுவதை காணக்கூடியதாக உள்ளது.

உள்ளூர் சந்தைகளில் தர்பூசணிகளின் விலை சடுதியாக குறைந்துள்ள நிலையில் மக்கள் அதிகளவான தர்பூசணிகளை கொள்வனவு செய்து வருகின்றனர்

அதேநேரம் நுங்கு போன்ற இயற்கையான பானங்களையும் பருகி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

Exit mobile version