நீர் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

tamilni 496

நாட்டில் நீர்க்கட்டணங்களை செலுத்துவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நீர் கட்டணங்களை செலுத்துதல் 15 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்புச்சபை அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய மொத்த நிலுவை 12 பில்லியன் ரூபா என சபையின் பிரதி பொது முகாமையாளர் பியல் பத்மநாத கஜதீராச்சி தெரிவித்துள்ளார்.

நிலுவையாக காணப்படும் நீர் கட்டணங்களை துரித கதியில் செலுத்துவதன் மூலம் நீர் விநியோகத் துண்டிப்பினைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என அவர் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

Exit mobile version