வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெளிப்படுத்தும் ஆர்வம் சந்தேகத்திற்கிடமானது என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ச பீதியடையவோ அல்லது அவசரப்பட்டு முடிவுக்கு வரவோ வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்கம் அனைத்து குற்றங்கள், மோசடிகள் மற்றும் ஊழல்கள் குறித்து முறையான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும் என்பதால், நாமல் ராஜபக்சவோ அல்லது வேறு எவரோ பீதியடையத் தேவையில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தாஜுதீனின் மரணம் குறித்து பல ஆண்டுகளாக கடுமையான சந்தேகங்கள் உள்ளன. இந்த மரணத்தின் பின்னணியில் ராஜபக்ச குடும்பம் இருப்பதாக பல ஆண்டுகளாக பல்வேறு விவாதங்கள் நடந்துள்ளன.
தற்போது அது தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதானவும் அவர் கூறியுள்ளார்.