வெளி இடங்களில் இருந்து விடுமுறை தினங்களில் முல்லைத்தீவு கடற்கரை பகுதிக்கு நீராட வரும் இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழக்கின்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வெளியிடங்களில் இருந்து வரும் மக்களுக்கு முல்லைத்தீவு கடல் சார்ந்த விழிப்புணர்வுகள் காணப்படுவதில்லை. இவ் இடங்களில் இதுவரை காவல் அரண்களும் அமைக்கப்படவில்லை.
வார விடுமுறைகளில் மக்கள் கடற்கரையில் கூடுவார்கள் என்பதால் அருகில் உள்ள பாதுகாப்பு தரப்பினரால் முல்லைத்தீவு கடற்கரைப் பகுதிகளில் 6 இடங்களில் சிவப்பு நிற கொடி அபாயத்தை சுட்டிக் காட்டுவதற்காக தொங்கவிடப்பட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment