3 24
இலங்கைசெய்திகள்

அனைத்து முன்னாள் அமைச்சர்களுக்கும் பறந்த எச்சரிக்கை கடிதங்கள்

Share

அனைத்து முன்னாள் அமைச்சர்களுக்கும் பறந்த எச்சரிக்கை கடிதங்கள்

அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு, எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் உத்தியோகபூர்வ இல்லங்களை கையளிக்காவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என நீதி, பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அரசாங்க உத்தியோகபூர்வ இல்லங்களை உடனடியாக கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு பல நினைவூட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை 11 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மாத்திரமே அவற்றை கையளித்துள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர்களுக்கு, உத்தியோகபூர்வ இல்லங்களை மீள கையளிப்பதில் பெரும் பின்னடைவு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு 07 பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களின் எண்ணிக்கை 40 ஆகும், அதன்படி இதுவரை கையளிக்கப்படாத உத்தியோகபூர்வ இல்லங்களின் எண்ணிக்கை 29 ஆகும்.

இதேவேளை, அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்குவது மற்றும் செலவினங்களைக் குறைக்கும் புதிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சகல அம்சங்களையும் மீளாய்வு செய்வதிலும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...