சமூக ஊடகங்களில் பரவி வரும் 2021 (2022) க.பொ.த உயர் தர (உ/த) போலி பரீட்சை அட்டவணையை பரீட்சார்த்திகள் பின்பற்ற வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இலிருந்து சரியான நேர அட்டவணையை பதிவிறக்கம் செய்யுமாறு திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன பரீட்சார்த்திகளைக் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை, காலை 8.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாவதுடன், பிற்பகல் பரீட்சைகள் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணிக்கும் ஏனைய நாட்களில் பிற்பகல் 1.00 மணிக்கும் பரீட்சைகள் ஆரம்பமாகும் என்றும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews