வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களிடம் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பொதிகளை வழங்குமாறு கூறினால் அதனை பெற்றுக் கொள்வதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குவைத் செல்ல எதிர்பார்த்திருந்த பயணி ஒருவர் எதிர்கொண்ட சம்பவத்தையடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குவைத் செல்ல எதிர்பார்த்தவருக்கு அறிமுகமான ஒருவர் பொதி ஒன்றை வழங்கி அதனை குவைத்தில் உள்ள நண்பரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அதனை உதவியாக செய்ய குறித்த பயணியும் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் பொதியில் என்ன உள்ளதென ஆராய்வதற்கு குவைத் செல்ல காத்திருந்த பயணியின் மனைவி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதனை திறந்து பார்த்த போது அதில் இருந்து பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆராயாமல் கொண்டு சென்றிருந்தால் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருக்கலாம்.
இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் போதும் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் இவ்வகையாக பொதிகளை பெற்றுக்கொள்வதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.