ரணில் இன்னும் 12 வருடங்கள் வழங்கினால் இலங்கையில் வேலையில்லாதவர்கள் என்ற ஒரு சமூகம் இல்லாது போகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இன்றையதினம்(26.06.2023) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாடு வீழ்ச்சியடையும் போது நாட்டைக் கைப்பற்றுவதே ஒரு எதிர்க்கட்சித் தலைவரின் கடமை கடமையாகும்.
ஆனால் எமது நாட்டில் அந்த பொறுப்பை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்க மறுத்துவிட்டார்.
அத்தனை இடர்களுக்கு மத்தியிலும் ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றார். அதற்காகவே இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரை போற்ற வேண்டும்
மேலும், அன்று குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட எமது நாட்டு பொருளாதாரத்தை இன்று ரணில் விக்ரமசிங்க மீட்டெடுத்துள்ளார் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Leave a comment