8 31
இலங்கைசெய்திகள்

வித்தியா கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Share

வித்தியா கொலை வழக்கு: மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கின் மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று (30) 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தொடர்புடைய பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

பிரதிவாதி சார்பில் முன்னிலையாக சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, இந்த பிரதிவாதிகள் 08 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதன்போது, ​​இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக பிரதி மன்றாடியார் நாயகம் ஆயிஷா ஜினசேன தெரிவித்தார்.

இந்த பிரதிவாதிகள் கொலை, சதி மற்றும் சட்டவிரோத குடியேற்றம் ஆகிய குற்றங்களில் குற்றவாளிகளாக காணப்பட்டதாக தெரிவித்த அவர், யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் பிரதிவாதிகள் இருவர் விடுவிக்கப்பட்டதாகவும் மன்றில் குறிப்பிட்டார்.

இதனையடுத்து வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பிரதிவாதிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மன்றாடியார் நாயகத்துக்கு உத்தரவிட்டது.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 20 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Share
தொடர்புடையது
26 69755fc19b197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கழிப்பறைக்குச் சென்ற 4 பிள்ளைகளின் தாய் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் கழிப்பறைக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து...

images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...