6 9
இலங்கைசெய்திகள்

வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Share

வாகன இறக்குமதி குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் எதிர்காலத்தில் வாகன இறக்குமதிக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

நேற்று (09) ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நமது நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando) கடந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பிற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

வாகன இறக்குமதி தொடர்பாக எமது அமைச்சரவையின் தீர்மானத்தை அவர் அங்கு அறிவித்தார். அதன்படி, சில கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அப்படி குறிப்பிட்ட எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்ய அனுமதி உண்டு என்று விளம்பரங்களை வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம் என்று சில நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஏனென்றால், அந்த இறக்குமதியைப் பற்றி முடிவெடுக்கும் போது, நமது கையிருப்பு மற்றும் நமது பொருளாதாரம் மீது அக்கறை செலுத்தி, அணு அணுவாக முடிவு எடுக்கப்படுகிறது.

இல்லாமல், பொருளாதாரத்தில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த முடிவை எடுக்க நாங்கள் தயாராக இல்லை” என தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...