9 21
இலங்கைசெய்திகள்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு

Share

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான மற்றுமொரு அறிவிப்பு

இந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வாகன இறக்குமதி ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதன்படி, பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை முதலில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 1ம் திகதி முதல் வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கார்களை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, தடை/கட்டுப்பாட்டை தொடர இலங்கை அதிகாரிகள் முடிவு செய்தனர் மேலும், 2,000க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டு, அவ்வப்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.

Share
தொடர்புடையது
images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...

25 67c712a0b3ef1 md
உலகம்செய்திகள்

ரஷ்ய அச்சுறுத்தலைச் சமாளிக்க: ஜேர்மனியில் மீண்டும் கட்டாய இராணுவ சேவைச் சட்டம் நிறைவேற்றம்!

ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகளில் ரஷ்ய ட்ரோன்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், ரஷ்யாவின் அச்சுறுத்தலைச்...

MediaFile 3 2
இலங்கைசெய்திகள்

வாழைச்சேனைப் பகுதியில் தொலைபேசிக் கம்பம் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன!

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில், வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில்...