இலங்கைசெய்திகள்

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

Share
24 662b197ab65cd
Share

வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு

உயர்தர இலவங்கப்பட்டை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (25) நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, விவசாய தொழில்நுட்பம், காகிதம் மற்றும் அச்சிடுதல் தொடர்பான துறைகளில் விரிவாக்கம் மற்றும் வர்த்தக முதலீடுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பிரதமரின் சீன விஜயம் குறித்து சீன மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த விஜயத்திற்கு தனது நன்றியையும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் உயிரி எரிசக்தி தொடர்பான தொழில்களின் வளர்ச்சியில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் CASMCE சங்கத்தின் துணைத் தலைவர் Xu Xiang, கூறியுள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...