அமைச்சுக்களின் உத்தியோகபூர்வ வாகனங்களை கோரும் அமைச்சர்கள்

rtjy 107

அமைச்சுக்களின் உத்தியோகபூர்வ வாகனங்களை கோரும் அமைச்சர்கள்

இலங்கையில் வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு அமைச்சுக்கள் உத்தியோகபூர்வ வாகனங்களை திரும்ப கோரிவருவதாக ஜனாதிபதி செயலக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இராஜாங்க அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ வாகனம் அவசர பழுதுபார்ப்புக்காக அனுப்பப்பட்டுள்ளதால், அவருக்கு தற்காலிக அடிப்படையில் வாகனம் ஒன்றைக் கோரி அமைச்சின் செயலாளர் அனுப்பிய கடிதம் ஒன்று செயலகத்துக்கு சென்றுள்ளது.

இந்தநிலையில் தமது வாகன கையிருப்பில் குறைந்தளவான வாகனங்களே உள்ளதாக ஜனாதிபதி செயலக தரப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.

Exit mobile version