வவுனியா நகரில் வாகன விபத்து

rtjy 348

வவுனியா- மன்னார் வீதி பிரதேச செயலகத்திற்கு முற்பகுதியில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (29.10.2023) இரவு 10.15 மணியளவில்வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பாதைசாரி கடவையில் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மின்சார சபையில் பணி புரியும் ஊழியர் ஒருவர் தனது வீட்டிலிருந்து பணி நிமித்தம் முல்லைத்தீவு செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி நடந்து செல்கையில் அந்த திசையில் பயணித்த வான் ஒன்று வேகக்கட்டுப்பட்டை இழந்து இவர் மீது மோதியுள்ளது.

வான் மோதியதில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொதுவைத்தியசலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய மெளபர் எனும் குடும்பஸ்தரே விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் வானின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version