யாழில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகள்: விலை வீழ்ச்சி

tamilni 251

யாழில் இருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகள்: விலை வீழ்ச்சி

உயர்வடைந்திருந்த மரக்கறிகளின் விலைகள் தற்போது பாரியளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், மரக்கறி வகைகளின் விலை 65% முதல் 70% வரை குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பிரதேசத்தில் பயிரிடப்பட்டிருந்த கரட், பச்சை மிளகாய் மற்றும் உருளைகிழங்கு என்பன தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து, உயர்வடைந்து வந்த மரக்கறி வகைகளின் விலைகள் குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக 2 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்த கரட், இன்று காலை ஒரு கிலோ 500 ரூபா தொடக்கம் 600 ரூபாவாக குறைந்துள்ளது.

நாட்டில் மரக்கறிகள் சீரற்ற காலநிலை காரணமாக அழிவடைந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டு அதிக விலைகளுக்கு விற்பனை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version