நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலையில் மாற்றம்

tamilni 374

நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலையில் மாற்றம்

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பல மரக்கறி தோட்டங்கள் அழிவடைந்துள்ளன.

இதனால் மரக்கறிகளின் விலைகள் சுமார் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரை, முட்டைக்கோஸ், தக்காளி பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளதால், பொருளாதார மையங்களுக்கு கிடைக்கும் அந்த காய்கறிகளின் இருப்பு வெகுவாக குறைந்துள்ளது.

தற்போது ஒரு கிலோ பீன்ஸ் மொத்த விற்பனை விலை 400 முதல் 420 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ கறி மிளகாய் மற்றும் மிளகாய் 500 முதல் 550 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 400 முதல் 500 ரூபாய் வரையிலும் விலை உயர்ந்துள்ளது.

மேலும் காய்கறி வரத்து குறைவதால் விலைகள் மேலும் உயரலாம் என பொருளாதார மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

Exit mobile version