நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு (Dambulla Economic Centre) கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன.
இன்று (டிசம்பர் 1) நிலவரப்படி பதிவாகியுள்ள சில மரக்கறிகளின் மொத்த விலைகள் கரட் ஒரு கிலோகிராம் ரூபாய் 700 முதல் ரூபாய் 1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
போஞ்சு, லீக்ஸ் (Beans, Leeks) ஒரு கிலோகிராம் ரூபாய் 500 முதல் ரூபாய் 800 வரை அதிகரித்துள்ளன.கடந்த வாரங்களில் ரூ.30க்கு விற்பனையான ஒரு கிலோகிராம் வட்டக்காயின் விலையும் தற்போது ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மழை மற்றும் மண்சரிவு காரணமாக பெரும்பாலான மரக்கறித் தோட்டப் பயிர்கள் அழிவடைந்தமையே இந்த விலை உயர்வுக்குக் காரணம் எனத் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலை சீரடையும் வரை இந்தப் பொருட்களின் விலை ஏற்றம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.