நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக கறிமிளகாய் மற்றும் தக்காளியின் விலைகள் நுகர்வோருக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளன.
இதன்படி, ஒரு கிலோகிராம் கறிமிளகாய், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் 1,050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அதேவேளை, தம்புத்தேகமவில் 980 முதல் 1,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஒரு கிலோகிராம் தக்காளி, தம்புத்தேகமவில் 400 ரூபாய் முதல் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நுவரெலியாவில் பச்சை வீட்டுத் தக்காளி 600 ரூபாய் முதல் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கரட் ஒரு கிலோகிராம் தம்புத்தேகமவில் 170 ரூபாய் முதல் 260 ரூபாய் வரையிலும், நுவரெலியாவில் 200 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.
இதேவேளை லீக்ஸ் ஒரு கிலோகிராம் தம்புத்தேகமவில் 260 ரூபாய் முதல் 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நுவரெலியாவில், 200 ரூபாய் முதல் 230 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்ட்டது.
அத்துடன் தம்புத்தேகமவில் ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 550 ரூபாய்க்கும், பாகற்காய் 600 ரூபாய் முதல் 750 ரூபாய் வரையிலும் போஞ்சி ஒரு கிலோகிராம் 450 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன.