நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் விநியோகக் குறைபாடு காரணமாக, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மிளகாய் வகைகளின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடைந்த நிலையிலேயே காணப்படுகின்றன.
ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை இன்று 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாய் ஒரு கிலோகிராம் 900 ரூபாய்க்கும், மஞ்சள் குடைமிளகாய் ஒரு கிலோகிராம் 1,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, தக்காளி ஒரு கிலோகிராம் 750 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.