வரி குறைப்பு தொடர்பில் பசிலின் தகவல்
இதற்கு பிறகு எந்தவொரு வரியும் குறைக்கப்படமாட்டாது என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி(VAT) 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வரியை குறைத்தாலும் நீதிமன்றத்தால் எம்மை பிழை என்றே சொல்கின்றனர். தற்போது அதிகரிக்க முடியாதல்லவா. இதற்கு பின்னர் எந்தவொரு வரியும் குறைக்கப்பட மாட்டாது.
தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாங்கள் சிந்திக்கவில்லை. நாங்கள் நாடாளுமன்றத்திற்குள் இல்லை என்பதால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானம் இல்லை.
கட்சி என்ற ரீதியில் இரண்டொரு நாட்களில் தீர்மானத்தை அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.