நாட்டின் குழந்தைகளுக்கு வைத்தியர்கள் எச்சரிக்கை
நாட்டின் தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர் மற்றும் குழந்தைகளிடையே பல்வேறு நோய்கள் பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில் கொழும்பு – லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளதாவது,
நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிறுவர் மற்றும் குழந்தைகளிடையே பல்வேறு நோய்கள் ஏற்படுவது இன்றைய நாட்களில் சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.
எனவே, குழந்தைகளுக்கு அதிகளவு திரவ உணவுகள் மற்றும் பானங்களை குடிப்பதற்கு கொடுக்க வேண்டும்.
வறண்ட காலநிலையுடன் வயிற்றுப்போக்கு போன்ற நோய்களும் சிறுவர்களிடையே பரவக்கூடும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் வைத்தியசாலையை நாடுமாறும் வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் வடமாகாணத்தில் வெப்பமான காலநிலை நிலவுவதால் சிறுவர்கள் மற்றும் சிறுவர்கள் அதிகளவு குடிப்பதற்கு சுத்தமான நீரை வழங்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி க.அருள்மொழி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Leave a comment