கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பித்த இந்த பிக் பாஸ் சீசன் 7, சமீபத்தில் தான் நிறைவு பெற்றது .
இந்த சீசன் டைட்டில் படத்தை அர்ச்சனாதட்டி சென்றார். இதைத்தொடர்ந்து இரண்டாம் இடத்தை மணியும், மூன்றாவது இடத்தை மாயாவும் பிடித்துள்ளார்.
இந்நிலையில் பிரபல பிக் பாஸ் விமர்சகரும் நடிகையுமான வனிதா விஜயகுமார்,அர்ச்சனா டைட்டில் பட்டத்தை வாங்கியது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, ” பிக் பாஸ் மேடையில் ஜனநாயகம் தோற்று பணநாயகம் ஜெயித்துவிட்டது. மாயாவுக்கு மூன்றாவது இடம் அர்ச்சனாவுக்கு முதல் இடம் என்பதை நினைக்கும் போது ச்சீ..த்தூ என்று தான் எண்ணம் தோன்றுகிறது. கமல், அர்ச்சனாவின் கையை தூக்கும் போதே நான் வெளியில் வந்துவிட்டேன்”.
“சமூக வலைத்தளங்களில் ப்ரோமோஷன் செய்து தான் அர்ச்சனாடைட்டில் பட்டதை வாங்கி இருக்கிறார். ஆனால், இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்கள் அர்ச்சனா வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ளவே இல்லை” என்று வனிதா கூறியுள்ளார்.
அர்ச்சனா காசு கொடுத்து தான் டைட்டில் வாங்கினார்!! பிரபல நடிகை ஓபன் டாக் | Vanitha Vijayakumar About Bigg Boss 7 Title Winner