மக்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தி! அடுத்த மாதம் குறைக்கப்படும் வற் வரி

tamilni 395

மக்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தி! அடுத்த மாதம் குறைக்கப்படும் வற் வரி

நாடு தற்போது பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு வருகிறது. இதனால் மக்களின் வாழ்கை ஓர் அளவில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலைமையை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் பெறுமதி சேர் வரியை 15 சதவீதமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்நதும் தெரிவிக்கையில்,

மக்கள் பதவியை விட்டு வெளியேற்றியபோது, நாட்டைக் முன்னேற்ற முடியாது என்றபோதும், எம்.பி. அமரகீர்த்தி கொல்லப்பட்டபோதும், வீடுகளுக்குத் தீ வைத்து சேதங்களை ஏற்படுத்திய போதும் ‘வேண்டாம்’ என்று சொன்ன ரணில் விக்ரமசிங்க மூலம் தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது.

பராக்கிரமபாகு மன்னன் பொலன்னறுவையில் பராக்கிரமபாகு சமுத்திரத்தை நிர்மாணித்து நீர்ப்பாசனத் தொழித்துறையை ஆரம்பித்தார். அவ்வாறே டி.எஸ். சேனநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கல்ஓயா திட்டத்தினால் நாடு வளம்பெற்று அரிசியில் தன்னிறைவு அடைந்துள்ளது.

ஜனாதிபதியின் தூரநோக்கு செயற்பாட்டினால் நாடு தற்போது பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு வருகிறது. இதனால் மக்களின் வாழ்கை ஓர் அளவில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலைமையை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் பெறுமதி சேர் வரியை 15 சதவீதமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் மஹாதீர் முகமது போன்ற ஒரு தலைவர் கொண்டு வரப்பட்டார். ஆனால் அவர் பொருளாதார ரீதியில் தவறான முடிவுகளை எடுத்ததால் நாம் அதனை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version