tamilni 395 scaled
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தி! அடுத்த மாதம் குறைக்கப்படும் வற் வரி

Share

மக்களுக்கு நிம்மதியளிக்கும் செய்தி! அடுத்த மாதம் குறைக்கப்படும் வற் வரி

நாடு தற்போது பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு வருகிறது. இதனால் மக்களின் வாழ்கை ஓர் அளவில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலைமையை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் பெறுமதி சேர் வரியை 15 சதவீதமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்நதும் தெரிவிக்கையில்,

மக்கள் பதவியை விட்டு வெளியேற்றியபோது, நாட்டைக் முன்னேற்ற முடியாது என்றபோதும், எம்.பி. அமரகீர்த்தி கொல்லப்பட்டபோதும், வீடுகளுக்குத் தீ வைத்து சேதங்களை ஏற்படுத்திய போதும் ‘வேண்டாம்’ என்று சொன்ன ரணில் விக்ரமசிங்க மூலம் தான் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது.

பராக்கிரமபாகு மன்னன் பொலன்னறுவையில் பராக்கிரமபாகு சமுத்திரத்தை நிர்மாணித்து நீர்ப்பாசனத் தொழித்துறையை ஆரம்பித்தார். அவ்வாறே டி.எஸ். சேனநாயக்க அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கல்ஓயா திட்டத்தினால் நாடு வளம்பெற்று அரிசியில் தன்னிறைவு அடைந்துள்ளது.

ஜனாதிபதியின் தூரநோக்கு செயற்பாட்டினால் நாடு தற்போது பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீண்டு வருகிறது. இதனால் மக்களின் வாழ்கை ஓர் அளவில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

இந்நிலைமையை தொடர்ந்து அடுத்த மாதம் முதல் பெறுமதி சேர் வரியை 15 சதவீதமாக கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் மஹாதீர் முகமது போன்ற ஒரு தலைவர் கொண்டு வரப்பட்டார். ஆனால் அவர் பொருளாதார ரீதியில் தவறான முடிவுகளை எடுத்ததால் நாம் அதனை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Aravinda Senarath 1200x675px 24 10 25 1000x600 1
செய்திகள்இலங்கை

அரசாங்கக் காணிகளைத் தமது குடும்ப உறுப்பினர்களுக்குப் பகிர்ந்தளித்த முன்னாள் காணி அமைச்சர்கள்: பிரதி அமைச்சர் அரவிந்த சேனாரத்ன பகிரங்கக் குற்றச்சாட்டு!

காணி அமைச்சை முன்னர் மேற்பார்வையிட்ட பல முன்னாள் அமைச்சர்கள், அரசாங்க நிலங்களைத் தமது குடும்ப உறுப்பினர்கள்...

Vraie Cally Balthazaar
இலங்கைசெய்திகள்

விழிப்புலனற்றோர் சவால்களை உணர: கண் கட்டப்பட்ட நிலையில் கொழும்பு நகரில் நடந்த மாநகர முதல்வர் வ்ராய் கெலீ பல்தாஸார்!

விழிப்புலனற்றோர் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, நேற்று (நவம்பர் 11) கொழும்பு...

image 97b458b7c8
செய்திகள்இலங்கை

இந்தியா – பாகிஸ்தான் வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து இலங்கைக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல்: அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி!

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அண்மையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கைக்கு எவ்விதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை...