வலிமேற்கு பிரதேச சபையின் சங்கானை வட்டார உறுப்பினர் தம்பிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் யாழ் மாவட்ட தேர்தல் ஆணையாளர் அமல்ராஜிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், தனது உடல்நலக்குறைவு காரணமாக எதிர்வரும் 31.03.2022 ஆம் திகதியிலிருந்து பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இக்கடிதத்தின் பிரதிகள்,தமிழரசுக்கட்சி தலைவர்,செயலாளர்,மற்றும் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவர் செயலாளர் ஆகியோரிற்கு முகவரியிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
#SrilankaNews