ஜனாதிபதி தேர்தலில் ரணில் அமோக வெற்றி

tamilni 241

ஜனாதிபதி தேர்தலில் ரணில் அமோக வெற்றி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமோக வெற்றியீட்டுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் புதிய சாதனையுடன் ரணில் தேர்தலில் வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்றில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக்கொண்டர் என்ற சாதனையுடன் ரணில் ஜனாதிபதி பதவியில் மீண்டும் அமர்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் ஒப்பீடு செய்யக்கூடிய உலகத் தலைவர்கள் எவரும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோரை விடவும் ரணில் விக்ரமசிங்க முன்னிலை வகிப்பதாக தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க உலகிற்கே தலைவர் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்றவுடன் அனைவரும் ஒன்றிணைந்து அவரை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர்.

ஏனெனில் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அச்சம் கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு ஆட்சியை பற்றி பெற்றுக்கொள்ள எவரும் முயற்சிக்க வேண்டாம் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version