கல்வித்துறையில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப திட்டம்!
பாடசாலைகளுக்கு 4,672 அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் புதிய பாடசாலை தவணையில் இந்த அதிபர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது கடினமான பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்களுக்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கல்வித்துறையில் உள்ள வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.