சீரற்ற காலநிலை! சாரதிகளுக்கான அறிவிப்பு

tamilni 230

சீரற்ற காலநிலை! சாரதிகளுக்கான அறிவிப்பு

நிலவும் சீரற்ற காலநிலையினால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொக்மாதுவ இடமாறலில் வெளியேறி கனங்கே திசை நோக்கி செல்ல முடியாத அளவுக்கு வெள்ள நிலைமை இன்னும் காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் பாலட்டுவ இடமாறலிலும், மத்தள பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கொடகம இடமாறலிலும் வெளியேறுமாறு அனைத்து சாரதிகளிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version